Sunday, March 23, 2014

கொங்க வெள்ளாளர் கல்யாண முறை அன்றும், இன்றும்

கொங்கு வேளாளர் கல்யாண முறை அன்றும், இன்றும் :

ஆரம்ப காலத்தில் தாய் மாமன் மகளையோ, அக்கா மகளையோ தான் கட்டி வைப்பார்கள். பிறகு, பெயர் பொருத்தம் மட்டும் பார்த்து கல்யாணம் செய்து வந்தனர், அப்புறம் ஜாதகம் என்ற விஷம் உள்ளே பரவியவுடன்., செவ்வாய் இருந்தால் கூடாது, ராகு, கேது இருந்தால் செய்ய கூடாது.. அந்த நட்சத்திரம் ஆகாது, இந்த நட்சத்திரம் ஆகாது என்று ஜோதிடம் பார்க்கும் பழைப்புவாதிகள், நமது பணத்தை வாங்கி, நமது மரபிற்கே கேடு விளைவிக்கிறார்கள். இதன் விளைவு, இன்று பலர் திருமணம் ஆகாமல் சன்னியாசி வாழ்க்கை வாழ்கின்றனர். இது தொடர்ந்தால், பெருபான்மை சமூகமாக வாழ்ந்த நம் கொங்கு வேளாளர் இனம், சிறுபான்மை சமூகமாக மாறும் நாள் வெகு தூரத்தில் இல்லை. சிலர் ஜாதி மாறி திருமணம் செய்து நம் இனத்தையே கேவலபடுத்துகின்றனர்.

பண்டைய மரபு :

ஒவ்வொரு கூட்டத்திற்க்கும் சில கூட்டத்திற்குள் தான் பெண் எடுத்து பெண் கொடுப்பார்கள்.
பட்டகாரர்கள், பட்டகார்களுக்குள்ளும்,
காணியாளர்கள், காணியாளர்க்குள்ளும்,
ஊர்கவுன்டர்கள், ஊர்க்கவுன்டர்கள்க்குள்ளும்,
குடியானவர்கள், குடியானவர்களுக்குள்ளும் தான் பெண் எடுப்பார்கள்,
இன்றும் பல கிராமங்களில் இதே வழக்கம் தொடர்ந்து வருகிறது. ஆனால்,
நகரத்தில் வசிப்பவர்கள் இதையெல்லாம் பார்பத்தில்லை.
ஆனால், இன்றோ பணம் நமது மரபுகளை அழித்து கொண்டு இருக்கிறது.
பணம், சொந்த பந்தத்துக்குள் ஏற்ற தாழ்வை ஏற்படுத்தி விட்டது..


பெண் வீட்டிற்க்கும், மாப்பிள்ளை வீட்டிற்க்கும் நடுவே கருத்துக்களை பரிமாறிக்கொள்ள தானவதிகாரர் மூலம் கோவிலில் வைத்தோ, கிராமங்களில் தண்ணீர் எடுக்க செல்லும் போதோ பெண்ணை, மணமகன் பார்க்க வைப்பார்கள். பெண் பார்க்க செல்லும் போது பூனை, பாம்பு குறுக்கே வர கூடாது, விறகு வெட்டுபவன், நாசுவன், விதவை பெண் எதிரே வந்தால், அதை கெட்ட சகுனமாக கருதி அந்த திருமணத்தை வேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள்.
வண்ணான் மற்றும் கழதை எதிரே வந்தால், அதை நல்ல சகுனமாக கருதி கல்யாணத்தை உறுதி செய்வார்கள். பின்பு ஒரு நல்ல நாள் பார்த்து,  நிச்சியதார்த்த புடவை மற்றும் நகை எடுப்பார்கள்.
எப்போதுமே பெண் வீட்டில் தான் நிச்சிய தாம்பூலம் நடைபெற வேண்டும். இன்றோ பலர் கல்யாணத்திற்கு முந்தின நாள், மண்டபத்தில் கடமைக்கு செய்கிறார்கள். இப்படி செய்வது முறையற்றது.