Wednesday, October 22, 2014

விடிய விடிய தீபாவளி, விடிஞ்சா அமாவாசை !

விடிய விடிய தீபாவளி, விடிஞ்சா அமாவாசை !

முன்னொரு காலத்தில்(திரேதா யுகம்) பிரளய காலத்தில் பூமி கடலுக்குள் மூழ்கி விட்டது. அப்போது பெருமாள் வராக அவதாரம்(பண்றி) எடுத்து ஹிரண்யாக்ஷன் என்ற அசுரனைக் கொன்று, பூமியை தன் கொம்பினால் தாங்கி நின்றார். அப்போது, பெருமாளுக்கும் பூமாதேவிக்கும் உண்டான அன்பினால் ஒரு குழந்தை பிறந்தது.
பெருமாள் வராக அவதாரத்தில் இருந்த போது குழந்தை பிறந்ததால் அக்குழந்தை அசுரதன்மையுடன் இருப்பதை கண்டு பூமாதேவி வருந்தினாள். அந்த குழந்தை தன் பெற்றோர்களான பெருமாளையும், பூமாதேவியிடம் துதித்து,
"நான் என் தாயின் கையால் மட்டுமே சாக வேண்டும்"
என்று ஒரு வரம் கேட்டான்.
பூமாதேவி சிறிது தயங்கினாலும், மனதை தேற்றினாள்.
பெருமாளும் அக்குழந்தை கேட்டு கொண்டபடி வரம் கொடுத்தார். அந்த குழந்தை தான் பின்னாளில் நரகாசுரன் என்று பெயருடன் வாழ்ந்தான்.

துவாபர யுகத்தில் பெருமாள் ஸ்ரீ கிருஷ்ணர் அவதாரம் எடுத்து துவாரகாபுரியை ஆட்சி செய்து வந்தார்.
பூமாதேவி, சத்தியபாமாவாக அவதாரம் செய்தாள்.
கிருஷ்னர் - சத்தியபாமா இருவரும் கல்யாணம் செஞ்சுகிட்டு வாழ்ந்தாங்க.

முன்பு, பெருமாளுக்கும் பூமாதேவிக்கும் பிறந்த நரகாசுரன், ஜோதிஷபுரம் என்ற ஊரை தலைநகராக கொண்டு ஆட்சி செய்து வந்தான். அவன் பல தவங்கள் செய்து நிறைய வரங்கள் பெற்று தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள், மனிதர்கள் என்று எல்லோரையும் கொடுமை படுத்தினான்.
அவர்கள் ஸ்ரீ கிருஷ்ணரிடம் வந்து தங்களை காப்பாத்துமாறு வேண்டினார்கள். அவர்களை காப்பாத்த ஸ்ரீ கிருஷ்ணர் போருக்கு தயாரானார். போருக்கு செல்லும் போது தன் மனைவியான சத்தியபாமாவை சாரதியாக தேரோட்ட செய்தார்.

விடிய விடிய கடும் போர் நடந்தது. கிருஷ்ணருக்கு தெரியும், முன்பு தான் கொடுத்த வரத்தினால் நரகாசுரனை அழிக்க முடியாது என்று. அதனால் கிருஷ்ணர், நரகாசுரன் எய்த அம்புபட்டு கீழே சரிவதை போல பாவனை செய்தார். இதை பார்த்து பதறி போன சத்தியபாமா கிருஷ்ணரின் கையில் இருந்த அம்பை எடுத்து நரகாசுரன் மேல் அம்பு தொடுத்தாள். அந்த அம்பு பட்டவுடன் நரகாசுரன் கீழே சரிந்தான். சரியும் போது தான், அவன் பெற்றிருந்த வரம் நினைவுக்கு வந்ததது. தாயே என்று கதறினான். அசுரன் ஏன் என்னை தாயே என்று சொல்கிறான் என்று சற்று குழம்பினாள் சத்தியபாமா.
அப்போது தான் பிறந்ததை பற்றியும், வரம் வாங்கியது பற்றியும் சொன்னான். என்னை பெற்றவர்களே "என்னை போன்ற தீய சக்திகள் அழிஞ்சா தான் எல்லோரும் சந்தோஷமா வாழ முடியும்.
அதனால் நான் இறந்த சதுர்திசி நாளை புண்ணிய நாளாக கருதி, அதிகாலையில் நல்லெண்ணெய் தேய்ச்சு, வெந்நீரில் குளிச்சு(கங்கா ஸ்நானம்), புத்தாடை உடுத்தி, நாட்டு வெடிகள் வெடிச்சு. வான வேடிக்கை விட்டு தீப ஒளி ஏற்ற வேண்டும் என்று வேண்டினான். அவர்களும் அவ்வாறே வரம் கொடுத்தனர்.

குறிப்பு :
* (சிவகாசி வெடிகள் = Phosphorus Base = சுற்றுசூழல் பாதிக்கும், மழை அளவை குறைக்கும்).
* (சாரைமண் கொண்டு உப்பிலியன் தயாரிக்கும் நாட்டு வெடிகள் = Nitrate Base = சுற்றுசூழல் பாதிக்காது, வெடித்தால் கண்டிப்பாக மழை வரும்).

நம் பாரத வர்ஷத்தில்,அவதார புருஷர்கள் பிறந்த தினத்தை மட்டுமே கொண்டாடும் வழக்கம் இருக்கிறது, ஆனால், தீமை செய்யும் கொடியவர்கள் இறந்தால் நன்மை என்றாலும்,
அந்த நாளை நாம் கொண்டாடுவதில்லை. ஆனால் நரகாசுரன் கிருஷ்ணர் மற்றும் பூமாதேவியிடம் பெற்ற வரத்தின் காரணமாக தீபாவளி பண்டிகையை இந்த கலியுகத்திலும் தொடர்ந்து கொண்டாடுகிறோம்.
இது பாகவத புராணத்தில் தெளிவாக கூறபட்டிருக்கிறது.

இந்த கதை சொல்வது என்னவென்றால் தீபாவளி அன்னைக்கு நமக்குள் இருக்கும் போன்ற தீய குணங்களை எறித்துவிட்டு,
எறித்துவிட்டு சத்வ குணம் என்ற நல்ல குணமாக மாறவே தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

1.ரஜோ(ராக்ஷச) குணம்(ஊக்கம், ஞானம், வீரம், தருமம், தானம், கல்வி, ஆசை, முயற்சி, இறுமாப்பு, வேட்கை, திமிர், தெய்வங்களிடம் செல்வங்கள் வேண்டுவது, வேற்றுமை எண்ணம், சண்டைகளில் உற்சாகம், தன் புகழில் ஆசை, மற்றவர்களை எள்ளி நகையாடுவது, பராக்கிரமம், பிடிவாதத்துடன் ஒரு முயற்சியை மேற்கொள்ளுதல்.
பயனில் விருப்பம் கருதி செய்யும் செயல்கள் ரஜோ குணமாகும்.)
ரஜோ குணத்திலிருந்து இன்பப் பற்று, ரஜோ குணப் பெருக்கினால் அசுரத்தன்மையும், செயல் புரிவதில் ஆர்வம், கனவு நிலையும், இறப்பிற்குப்பின் மனித உடலையும் அடைகிறான்.

2.தமோ குணம் (காமம், வெகுளி, மயக்கம், கலக்கம், கோபம், பேராசை, பொய் பேசுதல், இம்சை, யாசித்தல், வெளிவேசம், சிரமம், கலகம், வருத்தம், மோகம், கவலை, தாழ்மை, உறக்கம், அச்சம், சோம்பல், காரணமில்லாமல் பிறரிடம் பொருட்களை எதிர்பார்த்தல் மற்றும் பிறர்க்கு கேடு விளைவிக்கும் செயல்கள் செய்வதும், பகட்டுக்காக செய்யப்படும் செயல்கள் தாமச குணங்கள் ஆகும்.)
தமோ குணத்திலிருந்து, சோம்பல் உண்டாகிறது. தமோ குணப்பெருக்கினால் இராட்ஷச தன்மையும், மோகமும் அதிகரிகின்றது. தமோ குணத்தினால் தூக்கநிலையும் உண்டாகிறது. தமோ குணத்தால் மறுபிறவியில் விலங்கு, மரம், செடி, கொடி போன்ற தாழ்வான நிலை பிறப்பு உண்டாகிறது.

3.சத்வ (சாத்விகம்) குணம் (நல்ல காரியங்களில் மனதைச் செலுத்தும் குணம், மன அடக்கம் (சமம்), புலன் அடக்கம் (தமம்), துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளும் இயல்பு (சகிப்புத் தன்மை), விவேகம், வைராக்கியம், தவம், வாய்மை, கருணை, மகிழ்ச்சி, நம்பிக்கை, பாவம் செய்வதில் கூச்சப்படுதல் (லஜ்ஜை), தன்னிலேயே மகிழ்ந்திருத்தல் (ஆத்மரதி), தானம், பணிவு மற்றும் எளிமை.
தர்மச்செயல்கள், தன் செயல்களைப் பகவானுக்கு அர்ப்பணம் செய்து விடுவது, பலனில் ஆசையில்லாமல் செயல்கள் செய்வது சாத்வீக குணமாகும். சத்வ குணமுடையவன் தெய்வத்தன்மையுடன் சொர்கத்தை அடைகிறான். (நாட்டு பசு நாடு இருந்தால் மட்டுமே இந்த கலியுகத்தில் சாத்வீக குணத்துடன் மனிதனால் இருக்க முடியும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூட கலியுகத்தில் மாட்டு தொழுவத்தில் தான் தூங்கினார் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.)

விடிய விடிய தீபாவளி(சதுர்திசி திதி), விடிஞ்சா அமாவாசை என்ற பழமொழியின் கதையும் இதுவே.

சதுர்திசி அதிகாலை அன்று தான் எண்ணெய் தேய்ச்சு குழிக்கோணும்.
சூரிய உதயமானதும் தீபாவளி பண்டிகை.
அமாவாசை தொடங்கறதுக்கு முன்னாடி நாள் சதுர்திசி வரும்.
சதுர்திசி திதி எப்போ தொடங்குதுனு பஞ்சாங்கத்த பார்த்து கொண்டாடவும்.
ஏன்னா, நம்மளோட நாள் சூர்ய உதயத்தில் தான் ஆரம்பமாகும்.
மெக்காலே ஆட்சி முறையால் பேய் உலாவுற அர்த்த ராத்திரில தான் நாள் தொடங்குதுனு நம்மள எல்லாம் நம்பவச்சுடாங்க பிரிட்டிஷ் கும்பினி சர்க்கார்.

எல்லாருக்கும் இனிய தீபாவளி பண்டிகை நல்வாழ்த்துகள்.

1 comment:

  1. மாமா நான் பொங்கல்... நீங்க தீபாவளியா!!!

    ReplyDelete